மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக நாடு முழுவதும் மாபெரும் வெற்றிபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து காங்கிரஸின் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட திட்டம் குறித்தும் விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம்கொடுத்தார் எனவும், கமிட்டி உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லைஎனவும் கூறப்பட்டது. பின்னர் ராகுல் பதவி விலகுவதாக கூறவே இல்லை என தெரிவிக்கப்பட்டது.

surjeewala about congress meeting held at delhi

Advertisment

Advertisment

இதனை வைத்து நாடு முழுவது பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டன.இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜீவாலா, "காங்கிரஸ் கட்சியில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்ய கட்சித் தலைவர் ராகுலுக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்து தவறான தகவல்கள் நாடு முழுவதும் பரவி வருவது துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கள், வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வரவேண்டும்" என தெரிவித்துள்ளார்.