Advertisment

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்; பரிதாபமாக உயிரிழந்த 2 ரசிகர்கள்

Suriya's two fans lost their lives

Advertisment

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரு ரசிகர்கள் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவிற்குத் தமிழ் மொழியைத் தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாஎனத் தென்னிந்திய மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் கேக் வெட்டி, அன்னதானம், உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காகப் பேனர் கட்டும்போது இரும்பு கம்பி அருகிலிருந்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

birthday Kanguva Surya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe