ADVERTISEMENT

தெலங்கானா என்கவுண்டர்... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...

01:13 PM Dec 12, 2019 | kirubahar@nakk…

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கடந்த 6 ஆம் தேதி அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் இந்த என்கவுண்டர் போலீஸாருக்கு பாராட்டுகளை பெற்று தந்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புகர் தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தும் எனவும், இந்த விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் வேறு நீதிமன்றமோ, அமைப்போ இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT