மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.

Advertisment

supremecourt gives deadline to election commission to take necessary action on modi annd amitshah

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அப்படி பிரச்சாரங்களில் பேசும்போது மோடியும், அமித்ஷாவும் புல்வாமா தாக்குதலையும், அதில் உயிர் நீத்த வீரர்களையும் பற்றி வாக்கு சேகரிக்கின்றனர். இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. தேர்தல் பரப்புரையில் விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவுசெய்யப்பட்ட 426 வழக்குகளில் பிரதமர் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் தேர்தல் ஆணைய இணையத்தில் இல்லை என தகவல் வெளியானது.

இதனையடுத்து இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த உச்சநீதிமன்றம் இன்று அந்த வழக்கை விசாரித்தது. மோடி, அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சி 9 புகார்கள் அளித்திருந்தது. இது தொடர்பாக வரும் திங்கள் கிழமைக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment