ரஃபேல் போர் விமானம் குறித்த முக்கிய விபரங்களை பத்து நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக யஷ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் பிஷாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். தற்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 10 நாட்களில் ரஃபேல் விமானம் வாங்கியது குறித்து முக்கிய விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதில், ரஃபேலின் விலை, ஒப்பந்தம் தொடர்பானவை, ஆகிய விபரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும். ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட விபரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Follow Us