Advertisment

மருத்துவ மேற்படிப்புக்கான ஐ.என்.ஐ - செட் தேர்வை தள்ளிவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

supreme  court of india

இந்தியாவில் கரோனாஇரண்டாவது அலை தீவிரமான பாதிப்பைஏற்படுத்திய நிலையில், முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதுநேரத்தில்எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிமர் மற்றும் நிம்ஹான்சில்மருத்துவ முதுகலை படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வானஐ.என்.ஐ - செட் வரும் ஜூன் 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

Advertisment

இந்தநிலையில்இந்த ஐ.என்.ஐ - செட் தேர்வை தள்ளிவைக்கக்கோரி 26 மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போதைய நிலையில் தேர்வைநடத்துவது, இந்திய அரசியல் அமைப்புதங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூன் 16 ஆம் தேதி தேர்வு என்பது தன்னிச்சையானது என குறிப்பிட்டதோடு, தேர்வை ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கஉத்தரவிட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்வை நடத்தி கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

Doctors Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe