/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ster-in_0.jpg)
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கலாம் என கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி ஃபாலி நாரிமன் அடங்கிய அமர்வு ஸ்டெர்லைட் வழக்கில் வரும் திங்களன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது. மேலும் திங்களன்று தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு மற்றும் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஆகியவற்றிற்கும் தீர்ப்பளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)