supreme court

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்தியபேரணியின்போது வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடிஏற்றப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லிபோலீசார்20க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், விவசாயிகளின் ட்ராக்டர்பேரணியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக, தேசியபுலனாய்வு முகமைவிசாரணை நடத்த வேண்டும்;ஓய்வுபெற்றஉச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள்உச்சநீதிமன்றத்தில் இன்று (03.02.2021) விசாரணைக்குவந்தது.

Advertisment

அப்போது, அரசு இந்தச் சம்பவம்குறித்துவிசாரணை நடத்தி, சரியானநடவடிக்கை எடுக்கும்என்பதைஉறுதியாக நம்புவதாகவும், அரசு இந்தச் சம்பவம்குறித்துவிசாரித்து வருவதாகவும் கூறியஉச்சநீதிமன்றம், மனுக்களைவிசாரிக்க மறுப்பு தெரிவித்ததோடுஅதை வாபஸ் பெற்றுக்கொள்ளவும், இந்தச் சம்பவங்கள் குறித்தவிசாரணை தொடர்பாக மத்திய அரசை அணுகவும் அனுமதியளித்து உத்தரவிட்டது.

மேலும், ஊடகங்கள் போதிய ஆதாரம் இல்லாமல், போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் எனக்கூறக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisment