/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/elephants.jpg)
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள முதுமலை, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தினுள்ளே வருகிறது. இப்பகுதியில், சிலர் யானை வழித்தடங்களில் விடுதிகள் மற்றும் ஹோட்டெல்கள் நடத்தி வருகின்றனர். இதனால் வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நுழைந்துவிடுகின்றன. குறிப்பாக யானைகள், காட்டு எருமைகள் கூட்டம் கூட்டமாக மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. எனவே யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2008ஆம் ஆண்டு யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 2011 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் இந்த விடுதிகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை 50க்கும் மேற்பட்ட விடுதி உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர்.
சுமார் பத்து வருடங்களாக நடக்கும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றமும் யானைகள் வழித்தடத்தில் ஆக்கரமிப்பு செய்துள்ள விடுதிகள், ஹோட்டல்களை முற்றிலுமாக அகற்ற உத்தரவிட்டனர். இந்நிலையில், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் கட்டிடங்களை சுற்றியுள்ள மின்வேலிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் யானை வழித்தடத்தில் இயங்கும் 40க்கும் மேற்பட்ட விடுதிகள், ஹோட்டெல்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)