Advertisment

'கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

supreme court

இந்தியாவில் கரோனாவால்பாதிக்கப்பட்டு இதுவரை 3.97 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கரோனாவால்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்தமத்திய அரசு, மத்திய - மாநில அரசுகள் நிதிச் சுமையில் இருப்பதாலும், நிதி பற்றாக்குறையாலும்கரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என தெரிவித்தது.

Advertisment

இந்தநிலையில்இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தபட்சநிவாரணம் வழங்குவது கட்டாயம் என கூறியுள்ளது.

Advertisment

பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன் கீழ் பரிந்துரைகளை வழங்காததன்மூலம், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது கடமையை செய்வதிலிருந்து தவறிவிட்டது என கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், கரோனாவால் இறந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசே முடிவு செய்யலாம் என கூறியுள்ளதோடு, கரோனாவால்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கானவழிகாட்டுதல்களை ஆறு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

corona virus national disasters Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe