Supreme Court order on sedition case

தேசத்துரோக வழக்கு தொடர்பான சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை அந்தப் பிரிவில் வழக்கு தொடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

124ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும்வரை புதிய வழக்குகளை பதிய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேசத்துரோக வழக்கு பதியப்படும் 124ஏ சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசத்துரோக வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ளவர்கள் பிணை கோரவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment