உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். உயர் நீதிமன்ற தலமை நீதிபதிகளாக பணியாற்றி வந்த வந்த ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, ஒப்புதல் வாங்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் நேற்று முன் தினம் இதற்கு ஒப்புதல் வழங்கினார்.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு புதிய நீதிபகள் பதவியேற்பு விழா நடந்தது. அந்த நான்கு பேருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் பதிவேற்றதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 24 லிருந்து 28ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)