Skip to main content

பாஜக வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! 

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

supreme court

 

இந்திய அரசியல் சட்டப்படி ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணுக்கு 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறு வேறு திருமண வயது என்பது பாலின சமன்பாட்டிற்கு எதிராகவுள்ளது என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் ஆண், பெண் இருவருக்கும் ஒரே வயதை திருமண வயதாக நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

 

இதேபோல், ராஜஸ்தானைச் சேர்ந்த அப்துல் என்பவரும், அம்மாநில உயர்நீதிமன்றத்தில், திருமண வயதில் பாலின வேறுபாடு கூடாது எனக் கோரி வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, இந்த இரண்டு வழக்குகளையும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.