supreme court

இந்திய அரசியல் சட்டப்படி ஆணின் திருமணவயது 21 ஆகவும், பெண்ணுக்கு18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆணுக்கும், பெண்ணுக்கும்வேறு வேறு திருமணவயது என்பதுபாலினசமன்பாட்டிற்கு எதிராகவுள்ளது எனபாஜகவழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா டெல்லிஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும் ஆண், பெண் இருவருக்கும் ஒரே வயதைதிருமணவயதாக நிர்ணயிக்கவேண்டும் எனவும்அவர் தனதுமனுவில்கோரியிருந்தார்.

Advertisment

இதேபோல், ராஜஸ்தானைச் சேர்ந்தஅப்துல்என்பவரும், அம்மாநிலஉயர்நீதிமன்றத்தில், திருமண வயதில் பாலினவேறுபாடு கூடாதுஎனக் கோரிவழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து பாஜகவழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, இந்த இரண்டு வழக்குகளையும் உச்சநீதிமன்றத்தில்விசாரிக்க வேண்டுமெனஉச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்தஉச்சநீதிமன்றம், வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்குநோட்டிஸ்அனுப்பி உத்தரவிட்டது.