ADVERTISEMENT

தலைநகர் பகுதி புலம்பெயர் தொழிலாளர்கள்; அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

05:24 PM May 13, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றை இழந்து பாதிக்கப்படாமல் இருப்பதையும், அவர்கள் நியாயமான பயணக்கட்டணத்தில் சொந்த ஊர் திரும்புவதையும் உறுதிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல்களை வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அதன்படி, தேசிய தலைநகர் பகுதியில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழோ, அல்லது வேற ஏதாவது திட்டத்தின் கீழோ உலர் ரேஷன் பொருட்களை வழங்க மத்திய அரசுக்கும், டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ரேஷன் பொருட்கள் வழங்க அவர்களிடம் அடையாள அட்டையை அதிகாரிகள் கேட்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

தேசிய தலைநகர் பகுதியில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் இருவேளை உணவாவது கிடைக்கும் வகையில், பிரபலமான பகுதியில் சமூக சமையலறை அமைக்க வேண்டும் எனவும் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கிருந்து சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியைச் செய்து தரும்படியும் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT