நிர்பயா வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு; தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்...

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

supreme court dismisses convict Pawan’s plea claiming juvenility

இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா தரப்பில், இந்த சம்பவம் நடந்தபோது தனக்கு 18 வயது பூர்த்தியாகாததால், சிறார் நீதி சட்டத்தின்படி விசாரிக்க வேண்டும் எனவும், தனது தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. பவன் குப்தாவின் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

Nirbhaya
இதையும் படியுங்கள்
Subscribe