கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தற்போது சிறையில் இருக்கும் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Lalu_prasad-std.jpg)
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லாலு மேல்முறையீடு செய்தார். தற்போது உச்சநீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)