உச்சநீதிமன்றத்தின் 47- வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார்.

Advertisment

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் எஸ்.ஏ.பாப்டேவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்.

supreme court chief judge Sharad Arvind Bobde swearing in ceremony delhi

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ.பாப்டே 2021- ஆம் ஆண்டு, ஏப்ரல் 23- ஆம் தேதி வரை 17 மாதங்கள் பணியில் நீடிப்பார். இவர் அயோத்தி, ஆதார் கட்டாயம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்துளளார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.