ADVERTISEMENT

அறங்காவலர்கள் நியமனம்; தமிழக அரசைப் பாராட்டிய உச்ச நீதிமன்றம்

06:48 PM May 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வது குறித்து இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஒன்று நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் சஞ்சய் கரோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு இன்று (12 ஆம் தேதி) வந்தது. அப்போது இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறங்காவலர்கள் நியமனம் செய்திட மாவட்டக் குழு அமைத்து அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மற்றும் கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல்கள் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பார்த்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசால் அறங்காவலர்களை நியமனம் செய்திட மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை நீதிபதிகள் பாராட்டினர். மேலும் விரைவில் அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமனம் செய்திட அறிவுறுத்தியதுடன் வழக்கினை வரும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT