Advertisment

''புதுவையின் சூப்பர் முதல்வர் தமிழிசை... டம்மி முதல்வர் ரங்கசாமி...''- நாராயணசாமி விமர்சனம்!

''Super Chief Minister Tamilisai... Dummy Chief Minister Rangasamy...

புதுச்சேரியின் சூப்பர் முதல்வர் தமிழிசை என்றும், டம்மி முதல்வர் ரங்கசாமி என்றும் முன்னாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

Advertisment

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதா? என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூறலாம், துணைநிலை ஆளுநரையும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கலாம். ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரண்டு அமைச்சர்கள் பாஜக தலைவரோடு சென்று திட்டங்கள் எல்லாம் வேகமாக நடைபெறவில்லை ஆகவே நீங்கள் தலையிட வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் கூறினால் முதலமைச்சர் மீது அந்த இரண்டு அமைச்சர்களும் நம்பிக்கை இழந்து விட்டார்களா? என்ற ஐயம் உருவாகிறது. ஆகவே நான் தொடர்ந்து சொல்லி வந்ததுபோல் புதுச்சேரி மாநிலத்தின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. ரங்கசாமி டம்மி முதல்வர் என்பதும் உறுதியாகிறது'' என்றார்.

Advertisment

Narayanasamy Puducherry Rangaswamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe