Advertisment

இந்தியாவில் தெரியத் தொடங்கிய 'சூப்பர் ப்ளூ மூன்'

Super Blue Moon started appearing in India

இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் என்ற அரிய நிகழ்வு தெரியத்தொடங்கி உள்ளது.

14 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழும் அரிய நிகழ்வு சூப்பர் ப்ளூ மூன்' என்ற நிகழ்வு ஆகும். அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் வானில் தோன்றும் அரிய நிகழ்வான 'சூப்பர் ப்ளூ மூன்' நிகழ்வு இந்தியாவில் தற்போது தெரியத்தொடங்கி உள்ளது. இந்த நிகழ்வு படிப்படியாக அதிகரித்து நாளை காலை 7.30 மணிக்கு 'சூப்பர் ப்ளூ மூன்' நிகழ்வு உச்சம் தொடும் என கூறப்படுகிறது. இதே போன்ற அடுத்த நிகழ்வு 2037 ஆம் ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிகழ்வை கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் குழந்தைகள் என பலரும் வானில் நிகழும் அரிய நிகழ்வை ஆர்வத்துடன் ரசித்து பார்த்து வருகின்றனர்.

Advertisment

astronomy India moon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe