Advertisment

சன்னிலியோனை வைத்து விளைச்சலைக் காத்த விவசாயி!

sunny leone

Advertisment

ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள செஞ்சு ரெட்டி(வயது 45) என்பவர் தன் விவசாய நிலத்தில் அதிக விளைச்சல் ஏற்பட்டிருப்பதால் அதை பார்க்கும் மக்கள் கெட்ட கண்ணை வைத்து விடுவார்கள் என்று, அவர்கள் கண்பார்வையை விவசாய நிலத்தின் மீதிருந்து திருப்பசாதுர்யமாக பெரிய அளவில் சன்னி லியோனின் உருவப்படத்தை வைத்திருக்கிறார்.

இதனைப்பற்றி செஞ்சு ரெட்டி கூறுகையில், "இந்த வருடம், என் பத்து ஏக்கரில் காய்கனிகள் நல்ல விளைச்சலிருக்கிறது. கண்டிப்பாக, இதனைப் பார்ப்பவர்கள் பொறாமையில் என் நிலத்தின் மீது கெட்ட கண்ணை விடுவார்கள் என்று நினைத்தேன். என் நிலத்தின் மீதுஅவர்கள் கண்பார்வை வராமலிருக்க என் நிலத்தின் பக்கத்திலேயே சன்னி லியோன் படத்தை பெரிதாக போஸ்டர் அடித்து ஒட்டினேன்" என்கிறார்.

அந்த போஸ்டரில் சன்னி லியோன் பிகினி உடை அணிந்தபடியுள்ளார். அதனுடன் அந்த போஸ்டரில் "யாரும் அழுகவோ அல்லது பொறாமையோ கொள்ளாதீர்கள்" என்றுதெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.

Advertisment

"இந்த யுத்தி சிறப்பாக செயல்படுகிறது. யாரும் என் விவசாய நிலத்தின் மீது கண்வைக்கவில்லை" என்று கூறினார்.

பொதுவாக விவசாய நிலங்களில் பறவைகள் வந்து கனிகளை தின்றுவிடும் என்பதற்காக காட்டுபொம்மைகளை வைத்திருப்பர், சிலர் கெட்டகண்ணு வைக்கக்கூடாது என்பதற்காக பூசணியை அல்லது எலுமிச்சையை கட்டுவர். என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்துக்கு ஏற்றபடி சன்னி லியோனை வைத்திருக்கிறார்.

sunny leone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe