Skip to main content

சன்னிலியோனை வைத்து விளைச்சலைக் காத்த விவசாயி!

Published on 14/02/2018 | Edited on 14/02/2018
sunny leone

ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள செஞ்சு ரெட்டி(வயது 45) என்பவர் தன் விவசாய நிலத்தில் அதிக விளைச்சல் ஏற்பட்டிருப்பதால் அதை பார்க்கும் மக்கள்  கெட்ட கண்ணை வைத்து விடுவார்கள் என்று, அவர்கள் கண்பார்வையை விவசாய நிலத்தின் மீதிருந்து திருப்ப சாதுர்யமாக பெரிய அளவில் சன்னி லியோனின் உருவப்படத்தை வைத்திருக்கிறார்.

இதனைப் பற்றி செஞ்சு ரெட்டி கூறுகையில், "இந்த வருடம், என் பத்து ஏக்கரில் காய்கனிகள் நல்ல விளைச்சலிருக்கிறது. கண்டிப்பாக, இதனைப் பார்ப்பவர்கள் பொறாமையில் என் நிலத்தின் மீது கெட்ட கண்ணை விடுவார்கள் என்று நினைத்தேன். என் நிலத்தின் மீது அவர்கள் கண்பார்வை வராமலிருக்க என் நிலத்தின் பக்கத்திலேயே சன்னி லியோன் படத்தை பெரிதாக போஸ்டர் அடித்து ஒட்டினேன்" என்கிறார்.

அந்த போஸ்டரில் சன்னி லியோன் பிகினி உடை அணிந்தபடியுள்ளார். அதனுடன் அந்த போஸ்டரில் "யாரும் அழுகவோ அல்லது பொறாமையோ கொள்ளாதீர்கள்" என்று தெலுங்கில்  எழுதப்பட்டுள்ளது. 

"இந்த யுத்தி சிறப்பாக செயல்படுகிறது. யாரும் என் விவசாய நிலத்தின் மீது கண் வைக்கவில்லை" என்று கூறினார்.

பொதுவாக விவசாய நிலங்களில் பறவைகள் வந்து கனிகளை தின்றுவிடும் என்பதற்காக காட்டு பொம்மைகளை வைத்திருப்பர், சிலர் கெட்டகண்ணு வைக்கக்கூடாது என்பதற்காக பூசணியை அல்லது எலுமிச்சையை கட்டுவர்.  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலத்துக்கு ஏற்றபடி சன்னி லியோனை வைத்திருக்கிறார்.                

சார்ந்த செய்திகள்

Next Story

போலீஸ் தேர்வு எழுத உத்தரப் பிரதேசம் வந்த சன்னி லியோன்?

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

சன்னி லியோன் வீட்டில் நடந்த சோகம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

sunny leone house worker baby missing issue

 

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் 1 குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார். மேலும் நிறைய நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.  

 

இந்த நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் மகள் காணாமல் போனதாக இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், மும்பை போலீஸ் பக்கத்தை டேக் செய்து,  "தனது பணிப்பெண்ணின் 9 வயது மகள் அனுஷ்கா கிரண், நேற்று மாலை 7 மணி முதல் காணவில்லை. அந்த சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு, ரூ.11,000 கொடுக்கப்படும் என" என குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்லாது அவர் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 கொடுப்பதாக பதிவிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் காணாமல் போன அந்த சிறுமி தற்போது கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்தது. கடவுள் மிகவும் பெரியவர். கடவுள் இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக. 24 மணி நேரம் கழித்து அனுஷ்காவை மீட்டெடுத்தோம்” என குறிப்பிட்டு மும்பை காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)