Advertisment

மாணவர் சேர்க்கை தகுதிப் பட்டியல்... சன்னி லியோன் முதலிடம்? -அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்!

sunny leone - actress - bollywood - kolkatta - ug - college - merit list

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் இளங்கலைப் படிப்பில் சேர்வதற்கான மாணவர் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பிரபல பாலிவுட் நடிகை, சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இருந்தது பலருக்கும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று தனது இணையத்தில் 12- ஆம் வகுப்பு முடித்து, இளங்கலை ஆங்கிலப் படிப்பிற்கு விண்ணப்பித்த,கல்வித் தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை வெளியிட்டது.அந்தப் பட்டியலில் 12- ஆம் வகுப்பில் நான்கு பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து முதலிடத்தில் இருந்தார்சன்னி லியோன். இது பெரும் அதிர்வலைகளை இணையத்தில் உண்டாக்கியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், "வேண்டுமென்றே யாரோ தவறாக இந்தத் தகவல்களைப் பதிவிட்டுள்ளனர். நாங்கள் அதை மாற்றச் சொல்லிவிட்டோம். இருப்பினும் இது குறித்து உரியவிசாரணை நடத்தப்படும்." என்றனர்.

Advertisment

இதனிடையே இதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து "உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டர் தேர்வில் சந்திக்கிறேன், எனது வகுப்பில் நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் என நம்புகிறேன்"என கிண்டலாகபதிவிட்டுள்ளார்சன்னி.

கடந்த பிப்ரவரி 2019- இல், பீகாரில் நடைபெற்ற ஜூனியர் எஞ்ஜினியர் (ஜே.இ.) பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலில் சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

college kolkata sunny leone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe