'கணவருக்கு உம்மா... கடவுளின் தேசத்தில் சன்னி லியோன்' வைரலாகும் வீடியோ!

பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் கவர்ச்சியில் மற்ற நடிகைகளில் டீச்சராக இருப்பவர். கனடாவில் இருக்கும்போது அந்த மாதிரியான படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டும் அம்மணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பல இந்தி படங்களில் கிளாமர் நடிகையாக பிஸியாக நடித்து வரும் சன்னி லியோன், தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற ஒரு வரலாற்றுப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சன்னி லியோன் கேரளாவுக்கு வருகை தந்துள்ளார். துபாயை தலைமையிடமாக கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை கடந்த 7 ஆம் தேதி கொச்சியில் திறந்து வைக்க அவர் கேரளாவுக்கு வருகை தந்தார்.

xcb

தனது கணவர் டேனியலுடன் காரில் வந்த சன்னி லியோன் வழக்கம் போல் தனது கவர்ச்சியையும் சுட்டித்தனத்தையும் சேர்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் உதட்டை குவித்து உம்மா உம்மா என முத்தம் கொடுக்க அதற்கு ஏற்றவாறு அவரது கணவர் தனது கூலிங் கிளாஸை ஏற்றி இறக்குகிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள சன்னி, கடவுளின் சொந்த தேசத்தில் உள்ளேன்.. வந்து கண்டுபிடியுங்கள்.. ஹாஹா என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

sunny leone
இதையும் படியுங்கள்
Subscribe