sumitra mahajan

நேற்று உத்தரகாண்ட் மாநிலம் 'லோக் மந்தன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,” நம் நாட்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதில் கால வரையறை எதுவும் இல்லாத நிலையில் தொடர்வதை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்று இடஒதுக்கீடு பற்றி பரப்புரையை தொடங்கினார்.

Advertisment

மேலும், டாக்டர் அம்பேத்கரே இடஒதுக்கீடு என்பது 10 வருடங்கள் இருந்தால் போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் 10 ஆண்டுகளுக்கு மக்களிடம் சமமான வளர்ச்சியை செயல்படுத்தவும் முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அப்போது நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள்தான் அதை மீண்டும் பத்து வருடங்களுக்கு நீட்டிக்கச் செய்தனர் என்று இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Advertisment