Advertisment

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு! - பா.ஜ.க. மகளிரணி தலைவி கருத்தால் சர்ச்சை

கோவா கடற்கரையில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து, பா.ஜ.க. மகளிரணி தலைவியின் கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Advertisment

Sulakshana

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கோவா மாநிலத்தில் உள்ள தெற்கு கடற்கரையில் கடந்த மே 25ஆம் தேதி 20 வயது இளம்பெண் தனது ஆண் நண்பருடன் சென்றிருந்தார். அங்கு வந்த மூன்று பேர் அந்த இளம்பெண்ணை அவரது ஆண் நண்பரின் முன்னிலையில் வைத்தே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. மகளிரணி தலைவி சுலக்சனா சாவந்த்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ‘ஒவ்வொரு தனிநபருக்கும் அரசால் பாதுகாப்பு வழங்கமுடியாது. இந்த விஷயத்தில் மக்கள்தான் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களைக் காப்பவர்களாக உருவாக்கப்படவேண்டும். இப்போது நாட்டில் பாலியல் தொந்தரவுகள் குறித்த வழக்குகள் பதியப்படுவது அதிகரித்துள்ளது. பெண்கள் துணிச்சலாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து வெளிப்படையாக பேசுவதால்தான் அது நிகழ்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

சுலக்சனாவின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து கோவா மகளிர் காங்கிரஸ் தலைவி பிரீத்தம் பேசுகையில், ‘ஒவ்வொரு தனிமனிதருக்குமான பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதுவே ஒரு அரசின் கடமை. அதேபோல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை வைத்துதான் மாநிலத்தின் வருவாய் இருக்கிறது எனும்போது, சுலக்சனாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது’ என கூறியுள்ளார்.

Gang raped Sexual Abuse Goa Sulakshana sawant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe