நிகழ்ச்சிக்கு வராத சுதீப்; களேபரத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்

Sudeep who did not come to the show; fans involved in the show

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சுதீப் கலந்து கொள்ளாததால் அவரது ரசிகர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த நாற்காலிகள் உள்ளிட்ட உடைமைகளை அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் வால்மீகி ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாலை வேளையில் நடிகர் சுதீப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், திடீரென அவர் வரவில்லை என அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் உடைமைகளை போட்டு உடைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்திஇறுதியாக அவர்களை அப்புறப்படுத்தினர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

karnataka
இதையும் படியுங்கள்
Subscribe