tirupati

Advertisment

திருப்பதி மலையில் பயணிகள் ஓய்வெடுக்கும் மண்டபத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் எஸ்விபிசி தொலைக்காட்சியின் பக்தி நிகழ்ச்சிகள் மற்றும் ஏழுமலையான் தொடர்பான பாடல்கள் பெரிய எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்படும். இந்நிலையில் திடீரென அந்த திரையில் சினிமா இந்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று மாலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் உள்ள வணிக வளாகத்தின் முன்புறம் இருந்த பயணிகள் ஓய்வு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய எல்.இ.டி திரையில் சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு இந்தி சினிமா பாடல் ஒளிபரப்பானது. இதுகுறித்து தேவஸ்தானத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து செயல்பட்டு தவறை சரி செய்தனர். ஆனால் இந்தி பாடல் ஒளிபரப்பானதை வீடியோ எடுத்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.