Advertisment

திடீரென ஓடிய ராகுல் காந்தி... வைரலாகும் வீடியோ

 A Sudden Running Race...  unity journey

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுவதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்தசெப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார்.

Advertisment

இந்நிலையில் தெலுங்கானாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி சாலையில் நடந்து செல்கையில் அங்கிருந்த சிறுவர்களுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென மாணவர்களுடன் சேர்ந்து ரன்னிங் ரேஸில் ஈடுபட்டார். அவர் ஓடிய நிலையில் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள், பொதுமக்கள், கட்சியினர் என அனைவருமே சேர்ந்து ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/bk-YZRFrii0.jpg?itok=s6EvIerO","video_url":" Video (Responsive, autoplaying)."]}

congress telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe