நடுவானில் சென்று கொண்டிருந்த 'கோஃபர்ஸ்ட்' விமானத்தில் திடீரென ஏ.சி இயங்காததால் பயணிகள் 3 பேர் மயங்கி விழுந்தனர்.
உத்தரகாண்ட்மாநிலம்டேராடூனில்இருந்து புறப்பட்ட 'கோஃபர்ஸ்ட்'விமானத்தில் நூற்றுக்கணக்கானோர் பயணித்து வந்த நிலையில், திடீரென விமானத்தில் ஏசி இயங்காமல் போனதாகக்கூறப்படுகிறது. காற்றோட்ட வசதி இல்லாததால் பயணிகள் கையில் வைத்திருந்த காகிதத்தால் விசிறிக் கொண்டிருந்த நிலையில், மூன்று பயணிகள் மயங்கி விழுந்தனர்.
இதுதொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் 'வயதானவர்கள் காற்றோட்ட வசதி இல்லாமல் அசௌகரியமான சூழ்நிலையில் பயணிப்பதாக'வீடியோவெளியிட்ட நிலையில் அந்தவீடியோவைரலாகிவருகிறது.