
கேரளத் தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கேரளா திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கு நடைபெற்றுவரும் நிலையில்ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாகக் கூறி தலைமைச் செயலகம் முன் எதிர்க் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சியினர் மீது தண்ணீரை பீய்த்தடித்துகலைக்க போலீசார் முயன்றுவருகின்றனர். தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக காங்கிரசின் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் பினராய் விஜயன் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)