Advertisment

"சக்தி வாய்ந்த பெண் மம்தா பானர்ஜி தான்" - சுப்பிரமணியன் சுவாமி

subramaniya swamy talk about mamthabanarji bold women politician

பாஜக மூத்த தலைவரும்முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி மேற்கு வங்க மாநிலம்கொல்கத்தாவில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புசார்பில் நடைபெற்றஉரையாடல் நிகழ்வில் நேற்று (09.05.2023) கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்கு மத்தியில் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாத எதிர்க்கட்சி தேவை. பலர்தற்போதைய மத்திய அரசை எதிர்த்து ஒரு கட்டத்துக்கு மேல் போகாமல் உள்ளனர். அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். இது போன்ற நிலைப்பாடுஇந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

Advertisment

மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் துணிச்சலான பெண். அவரை மிரட்ட முடியாது. மம்தா பானர்ஜிமேற்கு வங்கத்தில்கம்யூனிஸ்ட்கட்சிகளை எதிர்த்துப் போராடிய விதத்தை பாருங்கள். நாட்டில் சக்திவாய்ந்த பெண் யார் என்ற கேள்விக்கு முன்பு ஜெயலலிதா இருந்தார். அதன் பிறகு மாயாவதியை அவ்வாறு நினைத்தேன். தற்போதைய சூழ்நிலையில் சக்தி வாய்ந்த பெண் மம்தா பானர்ஜி தான். அவர் தான் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கக் கூடியவர்" என்று கூறினார்.

kolkata
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe