
பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (20.12.2021) கேரளாவில் கேரள பிராமண சபையின் மாநில மாநாட்டைத் தொடங்கிவைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பினராயி விஜயன் தலைமையிலான அரசைக் கலைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக தலைவர் கொல்லப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “அரசாங்கம், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிவிட்டால், அது கலைக்கப்பட வேண்டும். 1991ஆம் ஆண்டு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, இதே காரணத்திற்காகக் கலைக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.