
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிலளித்துவருகின்றனர். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, லடாக்கில் சீனர்கள் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டினரா என்ற கேள்வியை அனுமதிக்க மாநிலங்களவை செயலகம் மறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
'தேசிய நலன்' காரணமாக தனது கேள்விக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மாநிலங்களவை செயலகம் கூறியதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.