பாஜக மூத்த தலைவரான சுப்ரமணிய ஸ்வாமி மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை எனவும், எனவும் தன்னை நிதியமைச்சராக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

subramanian swamy about indian economy

Advertisment

Advertisment

இதுகுறித்து பேசிய அவர், "ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதங்களை அதிகரித்தார், எனவே நிதி மூலதன செலவு அதிகரித்தது. பல சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்படுவதற்கு காரணம் ரகுராம் ராஜன் தான். பொருளாதாரம் என்பது ஒரு மிகப்பெரிய பிரிவு. அதில் ஒரு துறை மற்ற துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஜே.என்.யூ சென்றால் அதில் பட்டம் பெறலாம், ஆனால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. பிரதமருக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால் அவர் என்னை நிதியமைச்சராக்க வேண்டும். ஆனால் நான் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமல்ல, நான் ஒரு அரசியல்வாதியும் கூட. எனவே நிதியமைச்சர் பதவியில் நான் நன்றாக செயல்பட்டால் அடுத்து பிரதமர் பதவி கேட்பேன் என கட்சியினர் பயப்படுகிறார்கள்" என தெரிவித்தார்.சுப்ரமணிய ஸ்வாமியின் இந்த பேச்சு பாஜகவினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.