பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சுப்ரமணியன் சுவாமி, பாஜக 50 சீட்டுகளுக்கு குறைவாகப் பெற்றால் ஆச்சர்யமடைவேன் என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்து 543 தொகுதிகளில் 50 சீட்டுகள் மட்டும் தானா? எனக் குழப்பமடைந்து பாஜகவினர் அதிர்ச்சியாகின்றனர்.
இதன்பின்னர் இந்த டுவிட்டை தெளிவுபடுத்தும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 50 சீட்டுக்கள் என ஸ்மைலியை பதிவு செய்துள்ளார் சு.சாமி.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், உங்கள் திருவிளையாடலை காவிகளிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். உத்தரப்பிரதேசத்தில் 50க்கும் மேல் இந்தியாவில் 300க்கும் மேல் பாஜக சீட்டுக்களை பிடிக்கும். என்ன ஆச்சு அக்கவுண்டை ஹேக் செய்து விட்டார்களா? சுப்ரமணியன் சுவாமி காங்கிரஸில் சேர்ந்து விட்டாரா? என கேள்வி எழுப்பி வரு கின்றனர்.