மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மஹாராஷ்டிராவில் 154இடங்களில் முன்னிலையில் இருக்கிறது பாஜக கூட்டணி. பெரும்பான்மைக்கு தேவையானதைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது பாஜக.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/subhash-barala.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஹரியானாவில் 47 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பாஜக கூட்டணி, தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் 36 இடங்களில்தான் முன்னிலையில் இருக்கிறது. பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை என்னும் நிலையில் பாஜக 40 இடங்களிலும் காங் கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிப்பதால் ஹரியானா தேர்தல் முடிவுகள் இழுபறியாக உள்ளன.
இதனையடுத்து பாஜக ஹரியானா தலைவர் சுபாஷ் பராலா கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து பேட்டியளித்துள்ளார்.தேர்தலில் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து கட்சியின் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானது உண்மைக்கு புறம்பானது. தொடர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறேன். ராஜினாமா செய்ததாக கூறும் தகவல் பொய்யானது என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)