Advertisment

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ.

sub-inspector misbehaves with a 4-year-old girl in rajasthan

Advertisment

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த மாதம் 25 ஆம் தேதி சட்டமன்றத்தேர்தல் வரவுள்ள நிலையில் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தவுசா மாவட்டம் ராகுவாஸ் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கும் பூபேந்திர சிங் என்பவரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை உதவி ஆய்வாளர் பூபேந்திர சிங் கடத்திச் சென்று தனது அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பூபேந்திர சிங்கை சரமாரியாகத் தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் பூபேந்திர சிங்கை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பூபேந்திர் சிங்கை கைது செய்த போலீசார், அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில்விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில்,இந்த ஆட்சியில் பெண்களுக்கு, சிறுமிகளுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறிபாஜக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

Rajasthan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe