Advertisment

சப்-இன்ஸ்பெக்டர் தூக்குபோட்டு தற்கொலை!  

புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விபல்குமார்(36). இவர் தற்போது வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார்.

Advertisment

புதுச்சேரி காவல்துறையில் 2011- ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். புதுச்சேரி நெட்டபாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்கள் விடுப்பு எடுத்திருந்த அவர் இன்று (21.11.2019) காலை மீண்டும் பணியில் சேர்ந்தார்.

Advertisment

sub inspector incident pondicherry police investigation

இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்தபோது திடீரென காவல்நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு கட்டிடத்திற்கு சென்ற அவர் பகல் ஒரு மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடலை கைப்பற்றிய நெட்டபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்வதற்கு முன்பாக விபல்குமார் தனது டைரியில் தனது கைப்பட எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.தற்கொலைகளை விசாரிக்கும் சப் இன்ஸ்பெக்டரே தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

incident Police investigation Pondicherry sub Inspector
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe