கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் பள்ளியின் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஆசிரியை மற்றும் சிறுவன் ஆகியோர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisment

The stunning CCTV footage !!The stunning CCTV footage !!

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தடுப்பின் மீது மோதி தலை கீழாக கவிழ்ந்த பின் அந்த ஆசிரியரும் மாணவனும்காயமின்றி கவிழ்ந்த பேருந்துக்குள்இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

The stunning CCTV footage !!The stunning CCTV footage !!

Advertisment

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.