தனியார் கல்லூரிமாணவிகள் விடுதியில் நுழைந்த கல்லூரியின் முதல்வர்,மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதைத்தொடர்ந்துமாணவிகள் அனைவரும் சேர்ந்து அவரைக்கட்டி வைத்துத்தாக்கிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் நிலையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் விடுதியும் உள்ளது. விடுதியில் ஏராளமானமாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். கல்லூரி முதல்வர்அதே கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று குடிபோதையில் விடுதியில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நிலையில் அலறியடித்துக்கொண்டேமாணவி சத்தமிட்டார். இதனால் ஒன்று சேர்ந்த மாணவிகள் அனைவரும் கல்லூரி முதல்வரைக்கட்டி வைத்து தாக்கினர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரைகைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.