Advertisment

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள்..கல்லூரி கேட்டை மூடிய முதல்வர் - கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை!

karnataka

கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில், இஸ்லாமிய பெண்கள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

இந்தநிலையில் உடுப்பியின்குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழககல்லூரி, ஹிஜாப் அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. கடந்த புதன்கிழமையன்றுசில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்குவந்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக 100 மாணவர்கள் காவி சால்வை அணிந்து வகுப்பிற்குவந்துள்ளனர்.

Advertisment

இதனையடுத்து குந்தாப்பூர்எம்.எல்.ஏ.வுடன் ஆலோசனை நடத்திய கல்லூரி நிர்வாகம், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளது. இந்தநிலையில் சமூகவலைதளங்களில் ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்த இஸ்லாமிய பெண்கள், வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஹிஜாப் அணிந்து கல்லூரி வந்த இஸ்லாமிய பெண்கள், தங்கள் கல்லூரி முதல்வரிடம் ஹிஜாப்போடு தங்களை வகுப்பில் அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர். மேலும் அந்த மாணவிகள், இரண்டு மாதங்களில் தேர்வு இருப்பதாகவும், தற்போது ஏன் கல்லூரி,ஹிஜாப் அணிவதில்பிரச்னையைஎழுப்புகிறது எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில்வைரலாகி வருகிறது.

Hijab karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe