ஜே.என்.யூ பல்கலைக்கழக தாக்குதல்... நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம்...

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.

students solidarity in jnu issue

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஒன்று திரண்டு டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல புனேவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்டில் பயிலும் மாணவர்கள், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கேட்வே ஆப் இந்தியா முன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Delhi JNU
இதையும் படியுங்கள்
Subscribe