Advertisment

ஒழுக்கமாக இருக்கச்சொன்ன ஆசிரியரின் தலையில் குப்பைக்கூடையை கவிழ்த்த மாணவர்கள்!

karnataka

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள பள்ளி ஒன்றில், சில மாணவர்கள் ஆசிரியரைக் குப்பைக் கூடையால்தாக்க முயன்றுள்ளனர். பின்னர் அந்த ஆசிரியரின் தலையிலேயே குப்பை கூடையை கவிழ்த்துள்ளனர். டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தை சகித்துக்கொள்ள முடியாது எனத்தெரிவித்துள்ள கர்நாடகாவின் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர், இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறையும், காவல்துறையும் விசாரித்து வருவதாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இதற்கிடையே ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள மாணவர்களின் அவமதிப்பிற்குள்ளான ஆசிரியர், வகுப்பறைக்குள் நுழையும்போதுதரையில் குட்கா பாக்கெட்டுகள் சிதறி கிடந்ததாகவும், எனவே தான் மாணவர்களை ஒழுக்கத்தைப் பேணுமாறு அறிவுத்தியதாகவும் அதனால்வகுப்பு எடுக்க தொடங்கியதும்சில மாணவர்கள் அவ்வாறுநடந்துகொண்டதாகவும்கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்கள் மீது புகாரளிக்கவேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.

karnataka teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe