பள்ளிக் கட்டணம் செலுத்த தாமதமாக்கிய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி. வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ளது ஜீல் கல்வி அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் தியான்கங்கா பள்ளி. இந்தப் பள்ளியில் பயின்று வந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் இடமாற்றச் சான்றிதழை வழங்கியது. இதனைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்தபோது, கட்டணம் செலுத்தாததே டி.சி. வழங்கியதற்குக் காரணம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கட்டணமாக ரூ.30 ஆயிரமும், காப்பீட்டுத் தொகையாக ரூ10 ஆயிரமும் வழங்கியும், கூடுதலாக பணம் கேட்டு பள்ளி நிர்வாகம் மோசடி செய்வதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகமே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படியே கட்டணம் கேட்கப்பட்டது. சென்ற ஆண்டு கட்டணம் செலுத்தியவர்களுக்கு, இந்தாண்டு என்ன பிரச்சனை வந்ததென்று தெரியவில்லை என பள்ளி நிர்வாகம் அலட்சியமாக தெரிவித்துள்ளது.

Advertisment

கல்வி வியாபாரமாக்கப்பட, அதற்கு அரசுத் துறை நிறுவனங்களும், அரசும் உடந்தையாக இருக்கும்போது, மக்களுக்கான நீதி மறுக்கப்படுவது நிகழும் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது இந்த செய்தி.