பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட இளைஞர்களை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி பகுதியில் கேல் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகின்றது. அதில் காஷ்மீரை சேர்ந்த மூன்று இளைஞர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் புகாரை பெற்றுக்கொண்ட அவர்கள், அந்த வீடியோவில் பேசிய இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும், அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்கவும் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த நோக்கத்திற்காக அவர்கள் இவ்வாறு பேசினார்கள் என்ற கோணத்தில் காவல்துறையினர் தங்களின் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.