A student who fell down from a running bus... The disturbing CCTV footage!

Advertisment

பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, படிகளில் தொங்கியபடி பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது, இதுபோன்று ஆபத்தான முறையில் பயணம் செய்து கீழே விழுவது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன.

அண்மையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் பேருந்து படியில் பயணம் செய்த நிலையில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கேரளாவில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி ஒருவர் சாலையில் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கேரளாவின் அலுவா நகரில் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பள்ளி பேருந்திலிருந்து மாணவி ஒருவர் சாலையில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக பின்னால் வந்த மற்றொரு பேருந்து தடுத்து நிறுத்தி சிறுமியைக் காப்பாற்றி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.