A Dalit student who did not bring a separate plate.. The teacher attacked the teacher

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ளதுபானி கிராமம். இங்குள்ள அரசுப் பள்ளியில் பயிலும் பட்டியலினமாணவர்கள் பள்ளியில் உணவருந்த வேண்டுமென்றால் வீட்டிலிருந்து அவர்கள் தனியாகத்தட்டு ஒன்றை உடன் எடுத்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தட்டு எடுத்துச் செல்லவில்லை.

எனவே, ஆசிரியை ஒருவர் அந்த மாணவரைப் பிரம்பால் அடித்து இழுத்துச் சென்று பள்ளியிலிருந்து வெளியே தள்ளியுள்ளார். இதனைக் கண்டு அவ்வழியாகச் சென்றபெண் ஒருவர் அந்த மாணவனிடம், என்னவென்று விவரம்கேட்க;மாணவன் பேசும் காட்சியைவீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ காட்சி உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.