ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த மாணவி; பதற வைக்கும் சம்பவம்!

A student tried to board the train and fell in kerala

கேரளா மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் இன்று காலை புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலில் பயணித்த ஒரு பெண், ரயிலில் இருந்து இறங்கி ரயில் பிளாட்பார்மில் உள்ள கடைகளில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், அந்த ரயில் மெதுவாக அங்கிருந்து புறப்பட தயாராகி நகர்ந்து கொண்டிருந்தது. இதனை கண்ட அந்த பெண், வேகமாக ஓடிச்சென்று அந்த ரயிலில் ஏற முயன்றுள்ளார். தனது கையில் வைத்திருந்த செல்போனோடு, அந்த ரயில் படியில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள பாதையில் தவறி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த, ரயிலில் பயணித்தவர்கள் உடனடியாக அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றவுடன், ரயில் நிலையத்தில் இருந்தவர்களும் சக பயணிகளும் அங்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த பெண் ரயில் தண்டவாளத்தில் சிறு காயங்களுடன் உயிருடன் இருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டனர். இதையடுத்து, உடனடியாக அந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரிக்கையில், அந்த பெண், நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவி எனத் தெரியவந்தது. ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kerala Train
இதையும் படியுங்கள்
Subscribe